கொல்கத்தா அரச மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், மரபணு சோதனையில் சஞ்சய் ராயுடன் ஒத்துப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வழக்கில், சஞ்சய் ராய் என்ற ஒருவர் மட்டுமே குற்றவாளியாக இருக்க முடியும் என, விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், பெண் மருத்துவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே, சஞ்சய் ராய்க்கு எதிராக குற்றப்பத்திரிகையை மிகத் துல்லியமாகத் தயாரித்து வருவதாக மத்திய புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளன.
மரபணு மற்றும் தடயவியல் சோதனைகள்மூலம், கூட்டுப் பாலியல் வன்கொடுமை இடம்பெறவில்லை என்பதை மத்திய புலனாய்வு அதிகாரிகள் உறுதி செய்திருப்பதாகவும், சஞ்சய் ராய் ஒருவர் மட்டுமே இந்தக் குற்றத்தில் ஈடுபட்டிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த வழக்கு விசாரணையில், இதுவரை வேறு யாருக்கும் தொடர்பிருப்பதற்கான எந்தத் தடயமும் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 9ஆம் திகதி மருத்துவமனையில் பெண் மருத்துவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதற்கு மறுநாள், தன்னார்வலர் சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது