நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தெரிவிற்கே தங்களின் ஆதரவு இருக்கும் என்று பள்ளிக்குடா பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி பள்ளிக்குட மக்களுடனான சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரிடமே அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது அவர்கள் மேலும் கூறுகையில் –
மக்களோடு மக்களாக இருந்து எங்கள் துயரில் பங்கெடுப்பதுடன், எமது வாழ்வாதாரத்தை உயர்த்தவதற்காக தொடர்ச்சியாக பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தெரிவிற்கே தங்களின் ஆதரவு இருக்கும் என்று தெரிவித்துள்ள பள்ளிக்குடா பிரதேச மக்கள், பொருளாதார வீழ்ச்சியில் இருந்தது நாட்டை மீட்ட ஜனாதிபதிக்கு பூரண ஒத்துழைபபை வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.