முட்கொம்பன் பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்க அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

செய்திகள் முக்கிய செய்திகள் 2

முட்கொம்பன் பிரதேச மக்கள் எதிர்தோக்கியுள்ள பிரச்சினைகளை இனம்கண்டு அவற்றிற்கான தீர்வினை பெற்றுக்கொடு்க்கும் முகமாக இடம்பெற்ற மக்கள்  சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அம் மக்களின் எதிர்பார்ப்புகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

எமது மக்களுக்கு தற்போதும் ஜனாதிபதி தேர்தல் என்ற வாய்ப்பு கிடைக்கவுள்ளது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி நாங்கள் இன்றைய ஜனாதிபதியுடன் சேர்ந்து பயணிப்பதன் ஊடாக  நாடும் எங்களுடைய மக்களும் அதிக பயன்களை பெறலாம் என தான்  நம்புவதாகவும்

கடந்த கால தவறுகளில் இருந்து மக்கள் விடுபட்டு எதிர்வரும் காலங்களில் அந்த சந்தர்ப்பத்தை ரணில் விக்ரமசிங்கவுக்கு கொடுப்பதன் ஊடாக அவரோடு சேர்ந்து பயணிப்பதற்கு ஊடாக  எமது மக்கள்  எதிர்கொள்ளுகின்ற பல்வேறு பிரச்சினைகளில் இருந்து வெளியில் வரலாம் என்றும் அதற்காக எம்முடன் அணி திரளவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.