புத்தளம், சேரக்குளிய கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 35,470 போதைமாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பலான தம்பபன்னி, வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பலான கஜபாவுடன் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டது.
இரண்டு பைகளில் இந்த போதைமாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், இது சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறதோடு கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.