
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற மாட்டாரென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டையில் இன்று இடம்பெற்ற இயலும் ஸ்ரீலங்கா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அனுரகுமார திஸாநாயக்க எவ்வாறு அச்சுறுத்தல் விடுக்க முடியும்.
அவர் தேர்தலில் வெற்றியடையப் போவதில்லை நான் அதனைச் சான்றளிக்கிறேன்.
தெற்கில் உள்ளவர்களையும் வடக்கில் உள்ளவர்களையும் அவர் அச்சுறுத்துகிறார்.
ஜே.வீ.பியினரின் கொள்கை அவ்வாறு தான் இருக்கும்.
உடனடியாக வடக்கு மக்களிடம் அனுரகுமார திஸாநாயக்க மன்னிப்பு கோர வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.