களுத்துறை பகுதியில் பஸ் மற்றும் ரயில்களில் பயணித்த பயணிகளின் சொத்துக்களை திருடிய குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று சனிக்கிழமை (07) களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை தெற்கு பகுதியை சேர்ந்த 37 வயதுடையவர் ஆவார்.
இவரிடமிருந்து களுத்துறை வடக்கு மற்றும் அளுத்கம பொலிஸ் பிரிவுகளில் திருடப்பட்ட இரண்டு மடிக்கணினிகளும், வேறு பகுதிகளிலிருந்து திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 03 மடிக்கணினிகளும் 02 கையடக்கத் தொலைபேசிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.