கொழும்பு – மட்டக்களப்பு வீதியில் விபத்து; பாதசாரி பலி

முக்கிய செய்திகள் 1

பெல்மடுல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழும்பு - மட்டக்களப்பு வீதியில் திப்பிட்டிகல பிரதேசத்தில் வாகனமொன்று மோதி பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பெல்மடுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. 48 முதல் 50 வயது மதிக்கத்தக்க நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரது சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெல்மடுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Posts