
இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு மேலும் தாமதிக்காமல் ஒன்றிணைந்த செயற்குழுவை உடனடியாக கூட்டுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, இந்திய மத்திய அரசாங்கத்துக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஆறு மாதங்களில் இலங்கை அதிகாரிகளால் 350 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், 49 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆறு மாதங்களில் ஏற்பட்டுள்ள பெரும் அதிகரிப்பு இதுவாகும். இந்தப்பிரச்சினை நீண்டு கொண்டே செல்கிறது.
கைதாகின்ற தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் விதிக்கப்படும் அபராதத் தொகையும் மீனவர்களால் தாங்கிக் கொள்ள முடியாதளவில் உள்ளது.
இந்த விடயங்களுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான ஒரே வழி, தாமதமின்றி ஒன்றிணைந்த செயற்குழுவைக் கூட்டுவதே ஆகும் என்று ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.