
இரத்தினபுரி, கலவானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெத்தகல பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் சந்தேக நபரொருவர் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளதாக கலவானை பொலிஸார் தெரிவித்தனர்.
கலவானை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி, கலவானை பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 37 லீற்றர் சட்டவிரோத மதுபானம் மற்றும் 1,297 லீற்றர் (07 பெரல்கள்) கோடா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.