விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு; 09 பேர் கைது

செய்திகள்

ஜா எல, தடுகம பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த இரு விபச்சார விடுதிகளிலிருந்து 09 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜா எல பொலிஸார் தெரிவித்தனர்.

ஜா எல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பின் போது, ஒரு விபச்சார விடுதியிலிருந்து ஐந்து பெண்களும் மற்றைய விபச்சார விடுதியிலிருந்து நான்கு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெல்லவாய, தம்புள்ளை மற்றும் கெக்கிராவை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 18 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜா எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.