சட்டத்தைக் கையிலெடுப்பதை அனுமதிக்க முடியாது – சுமந்திரன்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

பொலிஸார் சட்டத்தை கையில் எடுத்து அநீதி இழைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். வடமராட்சி கிழக்கு, மணற்காடு பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், சட்டத்தை நடைமுறைப்படுத்தவே பொலிஸாருக்கு உரிமையுள்ளதாகவும், அதனை மீற அனுமதியில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, யாழில் இடம்பெறும் சட்டவிரோத மண் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்களைக் கைதுசெய்து சட்டத்தை அமுல்ப்படுத்த பொலிஸாருக்கு முடியும் எனவும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளதுடன், பொலிஸார் செய்ய வேண்டியது சட்டத்தின் ஊடாக குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதே தவிர, அவர்களைக் கொலை செய்வதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

மணற்காடு சம்பவத்தில் பொலிஸார் சட்டத்தை மீறி செயற்பட்டுள்ளதாகவும் எனவே அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.