நல்லூர் மகோற்சவ காலத்தில், ஆலயத்திற்கு வருகை தந்தவர்களால் தவறவிடப்பட்ட பொருட்கள் சிலது யாழ். மாநகர சபையில் உள்ளதாகவும் , அதனை அடையாளம் காட்டி உரியவர்கள் பெற்றுக்கொள்ளுமாறு மாநகர சபை ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆலயத்திற்கு வருகை தந்தவர்கள் தவறவிட்ட பொருட்கள் கண்டெடுத்தவர்கள் , அவற்றை ஆலய உற்சவ கால பணிமனையில் ஒப்படைத்திருந்தனர்.
அவற்றில் இது வரை உரியவர்கள் அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ளாத கைச்சங்கிலி ஒன்று, மோதிரம் (பெண்களினது) ஒன்று, பணப்பைகள் 9, மணிக்கூடுகள் 18, தேசிய அடையாள அட்டை 4, சாரதி அனுமதிப்பத்திரம் 4, வங்கி அட்டைகள் 4. மோட்டார் சைக்கிள் திறப்புகள் உள்ளிட்ட 39 திறப்புகள் என்பன மாநகர சபையில் உள்ளது.
இவற்றை உரிமையாளர்கள் உரிய ஆதாரங்களை உறுதிப்படுத்தி மாநகரசபை நிர்வாகக் கிளையில் அலுவலக நேரத்தில் 11ஆம் திகதி புதன்கிழமை தொடக்கம் ஒக்ரோபர் மாதம் 10ஆம் திகதி வியாழக்கிழமை வரை பெற்றுக்கொள்ளலாம் என யாழ்.மாநகரசபை ஆணையாளர் அறிவித்துள்ளார்.