ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சார கூட்டம்: கிளிநொச்சியில் வரலாறு காணாத கூட்டம்

சிறப்புச் செய்திகள் செய்திகள்

கிளிநொச்சி, செப். 10: கிளிநொச்சியில் நடந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரசார கூட்டத்தில் வரலாறு காணாத மக்கள் வெள்ளம் அலை மோதியது. இந்தக் கூட்டத்தை ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஏற்பாடு செய்திருந்தது.

வீழ்ச்சியிலிருந்து நாட்டை எழுச்சி பெறச் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்வை வெற்றிபெறச் செய்வோம் எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சி நகரப்பகுதியில் உள்ள பசுமைப்பூங்காவில் இந்தக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் சுமார் 5,000 மக்கள் கலந்து கொண்டனர். மக்கள் இருக்க இடம் இல்லாமல் நின்று கொண்டிருந்ததை காணக் கூடியதாக இருந்தது.

Trending Posts