இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்கை இதுவரை அளிக்காதவர்கள் இன்றும் வாக்களிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
காலை 8.30 முதல் மாலை 4.30 வரை தத்தமது மாவட்ட செயலக அலுவலகத்தில் தபால்மூல வாக்கை அளிக்க முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தபால்மூலம் வாக்களிக்க தகுதிபெற்ற அரச உத்தியோகத்தர்கள் வாக்களிப்பதற்காக இதற்கு முன்னர் 4, 5 மற்றும் 06 ஆம் திகதிகளில் அவரவர் பணிபுரியும் அரச நிறுவனங்களில் அமைக்கப்பட்டிருந்த தபால்மூல வாக்களிப்பு நிலையங்களில் வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டிருந்தது