ஐக்கிய அரபு இராச்சியத்தின் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இத்தாலியின் ரோம் நகருக்கு தப்பிச் செல்ல முயன்ற இரண்டு சிரிய குடும்பங்களைச் சேர்ந்த 07 பேர் இன்று (12) கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் சிரியாவில் வாழ்ந்த மூன்று பெரியவர்கள் மற்றும் நான்கு குழந்தைகளைக் கொண்ட இரண்டு குடும்பங்கள்.
விமான நிலைய குடிவரவு கவுன்ட்டர்களை வந்தடைந்த அவர்கள், அங்கு பணிபுரிந்த குடிவரவு அதிகாரிகளுக்கு சந்தேகத்தின் பேரில், சமர்ப்பித்த ஆவணங்களுடன் எல்லை ஆய்வுப் பிரிவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்ததுடன் மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப சோதனையில் இந்த கடவுச்சீட்டுகள் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன் பின்னர், இந்த சிரியா நாட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், தரகர் ஒருவரிடம் தலா 2,000 அமெரிக்க டொலர்கள் செலுத்தி, துருக்கியில் இந்த கடவுசீட்டுகளை ஏற்பாடு செய்திருப்பது தெரியவந்துள்ளது.