கிளிநொச்சியில் தமிழரசுக் கட்சியின் கூட்டம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

கொள்கை பரப்புச் செயலாளர் வேளமாளிதன் தலைமையில் ஆரம்பமான இக்கலந்துரையாடலில் கிளிநொச்சியின் அரசியல் மற்றும் அபிவிருத்தி குறித்து பல்வேறு கருத்துக்கள் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், மாகாண சபை உறுப்பினர்கள் கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.