நாட்டைக் குழப்புவதற்குச் சிலர் முயற்சிக்கிறார்கள் – கல்வியமைச்சர் குற்றச்சாட்டு

செய்திகள் முக்கிய செய்திகள் 3

புத்த தர்மம் மற்றும் நாட்டிலுள்ள கட்டளைச் சட்டத்தின்படி செயற்பட்டுக் கொண்டிருக்கும் போது, விடயங்களை திரிவுபடுத்தி அடிப்படையற்ற கருத்துக்களை பரப்புவதற்கு சிலர் முயற்சித்துக் கொண்டிருப்பது வருத்தமளிக்கும் விடயமென கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதுடன், இடம்பெற்ற ஊழல், மோசடிகளை மறைக்கும் நோக்கில் மக்களின் அவதானத்தை திசை திருப்புவதற்கு சிலர் முயற்சித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பிரசாரங்கள் ஊடாக நாட்டின் பௌத்த பாரம்பரியத்தை வீழ்த்தும் திட்டம் இருக்கின்றதோ என்ற சந்தேகம் ஏற்படுவதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.