மண்வெட்டியால் தாக்கி நபரொருவர் கொலை!

முக்கிய செய்திகள் 1

வாக்குவாதம் நீண்டதில் மண்வெட்டியால் தாக்கி நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபரின் மகளை திருமணம் செய்யவிருந்த நபரினால் இந்த கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (30) மாலை வெயங்கொட, கெமுனு மாவத்தை, பத்தலகெதர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பத்தலகெதர, வெயாங்கொட பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

கொலையை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரும் மோதலில் காயமடைந்து பொலிஸ் பாதுகாப்பில் வத்துபிட்டியல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீதவான் விசாரணைக்காக சடலம் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெயாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.