பொதுத் தேர்தலுக்கு 11 பில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை அனுமதி!

முக்கிய செய்திகள் 2

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு 11 பில்லியன் ரூபாவினை ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தின தாக்குதல், பிணைமுறி மோசடி போன்ற சம்பவங்கள் தொடர்பில் மீள் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

விரைவில் விசாரணைகளை நிறைவு செய்யவும் திட்டமிட்டுள்ளாதாக அவர் சுட்டிக்காட்டினார்.