வாழைப்பழம் தொண்டையில் சிக்கி முதியவர் பலி

முக்கிய செய்திகள் 1

பலாங்கொடை வெலிகேபொல பிரதேசத்தில் வாழைப்பழம் தொண்டையில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலாங்கொடை வெலிகேபொல பிரதேசத்தில் வசித்து வந்த பி.டபிள்யூ.பியதாச என்ற 74 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வாழைப்பழத் துண்டு தொண்டையில் சிக்கி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.