பேரூந்து கட்டணத்தை 04 வீதத்தால் குறைக்க கலந்துரையாடல்

முக்கிய செய்திகள் 2

எரிபொருள் விலை குறைவினால் பேரூந்து கட்டணத்தை 04 வீதத்தால் குறைக்க முடியும் என அகில இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

28 ரூபாவாக உள்ள குறைந்தபட்ச பேரூந்து கட்டணத்தை 25 ரூபாவாக குறைக்க முடியும் என அதன் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

கடந்த கட்டண திருத்தத்தின் போது ஆட்டோ டீசலின் விலை 11 ரூபாவினாலும் இன்றைய நிலவரப்படி 24 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதால் பேரூந்து கட்டணத்தை குறைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்கும் சாத்தியம் இல்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை குறைந்த போதிலும், டயர்கள், உதிரி பாகங்கள் மற்றும் பிற மூலப்பொருட்களின் விலைகள் இன்னும் அதிகமாகவே இருப்பதாக அதன் தலைவர் சுதில் ஜெய்ருக் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் பெட்ரோலின் விலை 300 ரூபாவுக்கு கீழ் குறைக்கப்பட்டால் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.