புதிய அமைச்சரவையில் 25 உறுப்பினர்களுக்கு மேல் இருக்காது – அமைச்சர் விஜித ஹேரத்

சிறப்புச் செய்திகள் முக்கிய செய்திகள் 2

அமைச்சரவைப் பேச்சாளராக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (30.09.2024) நடைபெற்ற அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டு இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (01) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான விஜித ஹேரத் கலந்துகொண்டார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் புதிய அரசாங்கத்தின் கீழ் அமைச்சரவை 25 க்கு மேல் இருக்காது என் வலியுறுத்தினார்.

இந்த அமைச்சரவையில் இராஜாங்க அமைச்சர்கள் நிமிக்கப்படமாட்டார்கள் எனவும், அந்தந்த அமைச்சுக்களுக்கு இணையாக 25 பிரதி அமைச்சர்களே நியமிக்கப்படவுள்ளதாகவும் வெகுசன ஊடக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவ‍ேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) மதிப்பீட்டின் அடிப்படையிலேயே எரிபொருள் விலைகள் திருத்தப்பட்டுள்ளது.

எரிபொருள் விலையை திடீரென 100 ரூபாவினால் அல்லது அதற்கும் மேல் குறைத்தால் அது பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.