அம்பேபுஸ்ஸ - கீனதெனிய ரயில் மார்க்கத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியிலிருந்து இன்று (01) காலை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பேபுஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய நபரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.