கொட்டாவை அதிவேக வீதிக்கு அருகில் மிஹிந்து மாவத்தை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றிலிருந்து இன்று (01) பிற்பகல் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் 50 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் இவர் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.