அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து நான்கு கைதிகள் இன்று (01) தப்பிச் சென்றுள்ளதாக அங்குனுகொலபெலஸ்ஸ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த நான்கு கைதிகளும் சிறைச்சாலையில் வெளிக்கள வேலைக்காக ஈடுபடுத்தப்பட்ட நிலையில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில்; சிறைத்தண்டனை அனுபவித்து வரும் அம்பலாந்தோட்டை லுனாம கொலனிய வீதியில் வசிப்பவர் ஒருவரும் கதிர்காமம் கோதமிகம பரண புத்தல வீதியைச் சேர்ந்த ஒருவரும் அம்பலாந்தோட்டை வளவ மெதகம வீதியை வசிப்பிடமாகக் கொண்ட ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் கற்பழிப்பு குற்றச்சாட்டில் கைதான ஒருவரும் அம்பாறை மிஹிதுபுர திருட்டு சம்பவத்தில் கைதான ஒருவருமாக நான்கு கைதிகளே இவ்வாறு தப்பியோடியுள்ளனர்.