ஐக்கிய அரபு இராச்சியம் அறிவித்துள்ள பொது மன்னிப்புக் காலத்தினூடாக அங்குள்ள இலங்கையர்கள், அதிகபட்ச பயனைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என டுபாயிலுள்ள இலங்கை துணை தூதரகம் கோரியுள்ளது.
விசா காலாவதியானமை உள்ளிட்ட பல காரணங்களால் தொடர்ந்தும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள், எந்தவித கட்டண விதிப்புமின்றி, மீள நாடு திரும்புவதற்கு இந்த பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் அறிவிக்கப்பட்டுள்ள இந்த பொது மன்னிப்புக் காலத்தினூடாக 1,380 இலங்கையர்களுக்கு நாடு திரும்புவதற்காக வசதி செய்யப்பட்டுள்ளது.
தற்சமயம் அவர்களில் 520 பேர் நாடு திரும்புவதற்கான விமான பயணச் சீட்டுக்களைப் பெற்றுள்ளதாக டுபாயிலுள்ள இலங்கை துணை தூதரக அதிகாரி அலெக்சி குணசேகர தெரிவித்துள்ளார்.