சிபாரிசு கடிதம் கொடுப்பது வழமை – மதுபானசாலை அனுமதிப் பத்திரம் தொடர்பில் விக்கி தெரிவிப்பு!

முக்கிய செய்திகள் 1

“என்னிடம் உதவி கேட்க வருபவர்களுக்கு சிபாரிசு கடிதம் கொடுப்பது வழமை அந்த வகையில் மதுபான நிலையம் ஒன்றை பெறுவதற்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் சிபாரிசு தேவைப்பட்டதால் அதனை நான் வழங்கியது உண்மை தான்“ என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் தாங்கள் மதுபான நிலையம் ஒன்றை அமைப்பதற்கான சிபாரிசு கடிதம் ஒன்றை வழங்கியமை தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், என்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு நான் அவர்களை நன்கு அறிந்திருந்தால் சிபாரிசு கடிதம் கொடுப்பது வழமை.

இவ்வாறு எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களும் தாங்களுக்குத் தேவையானவர்களுக்கு சிபாரிசுக் கடிதங்களை வழங்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவர்.

எனக்கு மதுபான நிலைத்துக்கு சிபாரிசு வழங்கி வருமானம் பெற வேண்டிய தேவை இல்லை அதனை நான் இந்த காலத்திலும் விரும்பியதும் இல்லை எனதெரிவித்தார்