சீனா ஓபன் டென்னிஸ்: நம்பர் 2 வீராங்கனைக்கு அதிர்ச்சி அளித்த படோசா

செய்திகள் முக்கிய செய்திகள் 3 விளையாட்டு

பீஜிங்:01

பல முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் 2 வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசாவுடன் மோதினார்.

இதில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய படோசா 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

இவர் நாளை மறுதினம் நடைபெறும் காலிறுதியில் சீனாவின் ஷாங் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.