கான்பூர்:1
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள வங்கதேசம் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இதற்கிடையே, வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இந்தியா முழுமையாகக் கைப்பற்றி அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் சொந்த மண்ணில் இந்தியா தொடர்ச்சியாக கைப்பற்றிய 18-வது டெஸ்ட் தொடர் இதுவாகும்.
2012-ம் ஆண்டில் இந்தியா 1-2 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் தொடரை பறிகொடுத்தது. அதில் இருந்து எழுச்சி பெற்று தொடர்ந்து வீறுநடை போட்டு வருகிறது.
இரு டெஸ்டிலும் சேர்த்து 114 ரன்கள் மற்றும் 11 விக்கெட் வீழ்த்திய அஸ்வின் தொடர் நாயகன் விருது வென்றார்.
இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை தொடர் நாயகன் விருது வென்ற முத்தையா முரளிதரனின் சாதனை அஸ்வின் சமன் செய்துள்ளார். இருவரும் 11 முறை தொடர் நாயகன் விருது வென்றுள்ளனர்.