பெற்றோல் இலவசமாக வழங்கப்பட்டாலும் கட்டணத்தை குறைக்கும் பொறிமுறை இல்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
மேல்மாகாண சபையின் வீதிப் போக்குவரத்து அதிகார சபையினால் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட முச்சக்கரவண்டிப் பயணிகள் போக்குவரத்துத் திட்டம் வழிதவறிச் செல்வதாகவும், அதனை மீளச் செயற்படுத்தி அமுல்படுத்த தலையிட்டால் தரமான முச்சக்கரவண்டிச் சேவையை ஏற்படுத்தத் தயார் எனவும் தெரிவித்தார்.
முச்சக்கர வண்டிக் கட்டணங்கள் குறைக்கப்படும் என அறிவிக்கும் நிலையில் தாம் இல்லை எனவும், அதற்கான சட்டப்பூர்வ உரிமை மேல் மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபைக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.