எத்தகைய உதவியானாலும் செய்யத்தயார் – பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

இலங்கைக்காக தமது நாடு ஆற்றமுடியாத விடயங்கள் எதுவுமில்லையென பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் அபுல் ஹஸன் மகமூத் அலி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்தார்.

பங்களாதேஷ் நாட்டுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை டாக்கா நகரில் பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சரை சந்தித்த போது வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த விஜயம் நீண்ட வரலாற்றைக் கொண்ட இலங்கை – பங்களாதேஷ் உறவின் மைல் கல்லாகும் எனவும் தெரிவித்தார்.

பங்களாதேஷ் இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்புக்களுக்கு இதன்போது ஜனாதிபதி நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.