நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலுபொத்த பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 44 வயதுடைய நீர்கொழும்பு, தலுபொத்த பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 57 லீற்றர் 750 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.