
இந்திய - இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் நான்கு பேர், இலங்கைப் பக்கமாக இருந்து பிரவேசித்த அடையாளம் தெரியாத குழு ஒன்றினால் தாக்குதலுக்கு உள்ளானதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகம், வேதாரண்யம் - புஷ்பவனம் பகுதியைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் இவ்வாறு தாக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
குறித்த குழு, தாக்குதலுக்கு உள்ளான மீனவர்களின் வலைகளை அறுத்துச் சேதப்படுத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இவ்வாறான அடையாளம் தெரியாத குழுக்களின் தாக்குதல்கள் இடம்பெறுவதாக அவ்வப்போது தமிழக மீனவர்கள் குற்றம் சுமத்துகின்ற போதிலும், இலங்கை கடற்பரப்பில் அவ்வாறான குழுக்களின் நடமாட்டம் எதுவும் அவதானிக்கப்படவில்லை என்று இலங்கை கடற்படை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.