உமாஓயா விவகாரம்; கபே அமைப்பின் குற்றச்சாட்டு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

உமா ஓயா கனவு திட்டம் தொடர்பில் சுற்றாடல் ஆய்வு அறிக்கை தயாரிப்பதற்கு விசேட நிபுணர்களாக செயற்பட்டு போலியான அறிக்கை சமர்ப்பித்த தற்போதைய தொல்பொருள் ஆய்வக பணிப்பாளர் நாயகம், தோவ விகாரை உள்ளிட்ட தொல்பொருள் நினைவிடங்கள் அறியப்படாத வகையில் நாசமடையும் போது அதற்காக எந்தவித தலையீட்டையும் மேற்கொள்ளவில்லையென கபே அமைப்பு குற்றம்சுமத்தியுள்ளது.

விகாரைகளிலுள்ள உண்டியல்களை சீல் வைப்பதற்கு காட்டப்படும் அர்ப்பணிப்பில் ஒரு பங்கேனும் மேல் ஊவா புராதன ஸ்தானங்களை உமா ஓயா அழிவிலிருந்து பாதுகாக்க அர்ப்பணிக்குமாறு கபே அமைப்பு கோரியுள்ளது.

கபே அமைப்பினால் தொல்பொருள் ஆய்வு பணிப்பாளருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், உமாஓய திட்டம் காரணமாக பண்டாரவளை, எல்ல, வெலிமடை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் புராதன நினைவிடங்கள், மதத் தலங்கள் ஆகியவற்றுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.