
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
உண்மை சம்பவத்தின் தழுவலை கொண்டுள்ள இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இப்படம் இம்மாதம் 31-ந்தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் முதல் பாடல் 'ஹே மின்னலே' ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
படத்தின் இசை வெளியீட்டு விழா தற்பொழுது நடைப்பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மணிரத்னம், லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு பங்கேற்றுள்ளனர்.
விழாவிற்கு சிவகார்த்திகேயன் என்.சி.சி மாணவர்களின் அணுவகுப்புடன் உள்ளே வந்தார். விழாவில் தொகுப்பாளர் லோகேஷ் கனகராஜிடம் " எங்க டான்ன எப்போ வச்சு ஒருப்படம் பண்ண போறீங்க" அதற்கு லோகேஷ் கனகராஜ் " ரொம்ப நாளா பேசிட்டு இருக்குற விசயம் தான் சீக்கிரமே பண்ணிடலாம் அதான் துப்பாக்கிய கையில வாங்கிடார்ல" என்றதும் அரங்கமே அதிர்ந்தது.