
இந்தியா - பெங்களுருவில் கடந்த மூன்று நாட்களாகப் பெய்துவரும் கன மழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
பெங்களுரு - கெங்கேரி பகுதியில் நடந்து சென்ற அண்ணன் மற்றும் தங்கை ஆகிய இருவர் வெள்ள நீரில் சிக்கி ஆற்றிற்குள் விழுந்து உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் 13 வயதுடைய சீனிவாஸ் மற்றும் 11 வயதுடைய லட்சுமி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சீனிவாஸின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில் லட்சுமியின் உடலைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள.