ஜனாதிபதிக்கு மகஜர் கையளிக்கவுள்ள கம்மன்பில!

முக்கிய செய்திகள் 2

சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பில் பொதுமக்களின் அதிருப்தியை ஜனாதிபதிக்கு தெரிவிப்பதற்காக மகஜர் ஒன்றில் கையொப்பமிடவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஆய்வு அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோர் பதவியில் இருந்து நீக்கப்படாமல் முதல் மாதத்திலேயே அரசாங்கம் சட்டத்தை தவறாக பயன்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

Trending Posts