சட்டவிரோதமாக தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய இருவர் கைது

முக்கிய செய்திகள் 2

ஹோமாகம நகரத்தில் சட்டவிரோதமாக தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டியதாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் இருவரும் ஹோமாகம நகரத்திற்கு முச்சக்கரவண்டியில் சென்று சட்டவிரோதமாக தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த போது அப்பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வத்தளை, மாபோல வெலிகடமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 29 முதல் 31 வயதுக்குட்பட்ட இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 1,200 தேர்தல் சுவரொட்டிகள் மற்றும் முச்சக்கரவண்டி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Posts