அநுராதபுரம்-தம்புத்தேகம பகுதியில் விபத்து: 4 பேருக்கு காயம்!

செய்திகள் முக்கிய செய்திகள் 1

அநுராதபுரம், தம்புத்தேகம - கல்நேவ வீதியில் எப்பாவல சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று புதன்கிழமை (30) காலை இடம்பெற்றுள்ளது.

லொறி ஒன்றின் முன்புறத்தில் உள்ள சக்கரமொன்றில் காற்று வெளியேறியதால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி வீதியின் வலது பக்கமாக திரும்பி எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது, மோட்டார் சைக்கிளின் செலுத்துனரும், துவிச்சக்கர வண்டியின் செலுத்துனரும், லொறியில் பயணித்த இருவரும் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Trending Posts