குருணாகலில் மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி உயிரிழப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

குருணாகல், நாகொல்லாகம - வேரகல வீதியில் தம்மிட்டகம பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதாக நாகொல்லாகம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (29) மாலை இடம்பெற்றுள்ளது.

வேரகலவிலிருந்து நாகொல்லாகம நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் பயணித்த மூதாட்டி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது படுகாயமடைந்த மூதாட்டி, நாகொல்லாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குருணாகல், நாகொல்லாகம, தம்மிட்டகம பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடைய மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாகொல்லாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Posts