பாராளுமன்றத்தில் ஒழுக்கம் மீறப்பட்டால் தண்டனையளிக்கும் சட்டம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

பாராளுமன்றத்தில் ஒழுக்கத்தை மீறி செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிராக வருங்காலங்களில் கடும் தண்டனையளிக்க அவசியமான சட்டத்தை தயாரிக்கவுள்ளதாக, பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.

களுத்துரையில் இடம்பெற்ற பாராளுமன்ற ஊடகவியலாளர்களுக்கான இரு நாள் வேலைத் திட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளைத் திருத்தி, அது குறித்து தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக, பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் உறுப்பினர்களுக்கு எட்டு வாரங்களுக்குள் பாராளுமன்றத்திற்குள் தடைவிதிக்கக் கூடிய வகையில் சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.