
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் இன்று இரவும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.