
மனம்பிட்டிய, மே 01
மனம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முச்சக்கரவண்டி ஒன்று பஸ் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் மற்றும் மனைவி உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பஸ் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மனம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.