சீனாவில் பள்ளி குழந்தைகள் கூட்டத்துக்குள் புகுந்த வாகனம்: ஏராளமானோர் காயம்

உலகச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

சீனாவின் ஹுனான் மாகாணம் சாங்டே நகரில் உள்ள தொடக்கப் பள்ளிக்கு இன்று காலை குழந்தைகள் வந்து கொண்டிருந்தனர். அப்போது வாகனம் ஒன்று பள்ளி வாசலில் மோதியது. இதில் ஏராளமான குழந்தைகள் காயம் அடைந்தனர். உடனே அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெற்றோர்கள் பள்ளியிலும், ஆஸ்பத்திரியிலும் குவிந்தனர்.

வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததா அல்லது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலா என்பது தெளிவாகத் தெரியவில்லை. வாகனத்தை ஓட்டி வந்தது யார் என்பது குறித்தும் போலீசார் தெரிவிக்கவில்லை.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Trending Posts