எகிப்தில் கால்வாயில் ரிக்சா கவிழ்ந்ததில் 8 குழந்தைகள் உயிரிழப்பு

உலகச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

கெய்ரோ,மே 01

எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் இருந்து வடக்கே பெஹைரா மாகாணத்தில் உள்ள நகரத்தில் தொழிற்சாலையில் பணியாற்றியவர்களை ஏற்றி கொண்டு ரிக்ஷா ஒன்று அவர்களை வீட்டில் விடுவதற்காக புறப்பட்டு சென்று உள்ளது.

அந்த ரிக்சா வண்டி அந்நாட்டின் நைல் ஆற்றின் டெல்டா பகுதியில் நீர்ப்பாசன கால்வாய் வழியே செல்லும்போது, திடீரென அதில் கவிழ்ந்தது.

இதில் ரிக்சாவில் பயணித்த 12 பேரில் 8 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர்.  மீதம் இருந்த 4 பேர் உயிர் தப்பியுள்ளனர்.

ரிக்சாவை ஓட்டி சென்ற 19 வயது ஓட்டுனர் மீது உரிமம் பெறாத, முறையாக பராமரிக்காத ரிக்சாவை ஓட்டியதற்காகவும், மனித படுகொலைக்கான குற்றச்சாட்டுகளின் பேரிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

அந்த நபர் மனித கடத்தல் மற்றும் குழந்தை தொழிலாளர் முறையில் தொடர்புடையவர் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். 

இதுதொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Trending Posts