
கொழும்பு,மே 01
அரசமைப்பு மறுசீரமைப்பால் நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை தீரப்போவதில்லை. எனவே பொருளாதார நெருக்கடியை நிர்வகிப்பதற்கான பொறிமுறையே தற்போது உருவாக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் மேதின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
நாட்டு பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது, வணிக நடவடிக்கைகள் வங்குரோத்து அடைந்துவிட்டன. பலர் தொழில்களை இழந்துள்ளனர். எதிர்காலம் குறித்து அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, பொருளாதார பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.