ராஜபக்ஷக்களுடனான உறவினை முறித்து கொள்கிறோம்: ஜீவன் தொண்டமான்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

கொழும்பு,மே 02

ராஜபக்ஷக்களுடனான உறவினை முறித்துக்கொள்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தின கூட்டம் கொட்டகலை சி.எல்.எஃப் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றிருந்தது.

இதன்போது, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலையும் கலந்துகொண்டிருந்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் கட்சியின் தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோரும் இதன்போது பங்கேற்றிருந்தனர்.

அங்கு உரையாற்றிய தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தொடர்ச்சியான பல தவறுகளை ராஜபக்ஷக்கள் இழைத்து வருவதால், அவர்களுடனான உறவினை முறித்துக்கொள்வதாக குறிப்பிட்டார்.

Trending Posts