இலங்கையின் பொருளாதார நெருக்கடி துரதிஷ்டவசமானது: இஸ்ரேலிய தூதுவர்

உலகச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

கொழும்பு, மே 02

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையானது துரதிர்ஷ்ட வசமானது எனவும் சுற்றுலா மற்றும் விவசாய துறையினை மேம்படுத்துவதன் மூலம் நாடு மீண்டும் ஸ்திரத் தன்மையினை அடைய முடியுமெனவும் இஸ்ரேலின் இந்தியா, இலங்கை மற்றும் பூட்டானுக்கான தூதுவர் நோர் கிலோன் (Naor Gilon) தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் தமது நற்சான்றிதழ்களை சமர்ப்பிக்க இலங்கைக்கு சென்றிருந்தபோது இலங்கை மிகவும் அழகான நாடு எனவும், இங்கு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளமையானது மிகவும் கவலைக்குரிய விடயம் எனவும் இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், இலங்கை மீண்டும் சிறந்த நிலைமையினை அடையுமென தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக இலங்கை அண்மைக் காலமாக சுமார் 51 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான வெளிநாட்டு கடனை மீளச் செலுத்தவில்லை எனவும் இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் Naor Gilon மேலும் தெரிவித்துள்ளார்.

Trending Posts