வரிகளை அதிகரிக்க வேண்டும்: நிதியமைச்சர் அலி சப்ரி

செய்திகள் முக்கிய செய்திகள் 2

கொழும்பு, மே 02

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண வரிகளை அதிகரிக்க வேண்டும் என நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இப்தார் நிகழ்வொன்றில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களை சந்தித்தபோது நிதியமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல தாமதித்தமை உள்ளிட்ட சில தீர்மானங்களே இந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என நிதியமைச்சர் அலி சப்ரி இதன்போது குறிப்பிட்டார்.

குறித்த இப்தார் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசர் காசிம், பைசர் முஸ்தபா, எம். ஹாரீஸ், அமிர் அலி, எஸ்.எம். மரிக்கார், சுசில் பிரேம்ஜயந்த, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முசாமில் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தனவும், தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்கவும் பங்கேற்றிருந்தனர்.

Trending Posts