இடைநிறுத்தப்பட்ட பரீட்சையை மீள நடத்துவது குறித்து பின்னர் தீர்மானிக்கப்படும்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள உயர்தரப் பரீட்சையை மீள நடத்துவது குறித்து எதிர்வரும் 29ஆம் திகதிக்கு பின்னர் தீர்மானிக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.

இன்று (27) பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 29ஆம் திகதிக்கு பின்னர் வானிலை நிலைமைகளை மீள்பகுப்பாய்வு செய்து தேவையான நிபந்தனைகளை அமைத்து அதன் பின்னர் மீண்டும் உயர்தர பரீட்சையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
எவ்வாறாயினும், மோசமான வானிலை காரணமாக க.பொ.த உயர்தரப் பரீட்சையை 3 நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நேற்று (26) தீர்மானிக்கப்பட்டது.

இன்று, நாளை மற்றும் 29 ஆகிய மூன்று நாள் உயர்தரப் பரீட்சை நடைபெறாது என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Trending Posts